/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சத்தி அரசு கல்லுாரியில் ஜூன் 2, 3ல் கவுன்சிலிங்
/
சத்தி அரசு கல்லுாரியில் ஜூன் 2, 3ல் கவுன்சிலிங்
ADDED : மே 30, 2025 12:59 AM
சத்தியமங்கலம் :சத்தி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் வரும் ஜூன், 2, 3ல் கவுன்சிலிங் நடக்கிறது. இதுகுறித்து கல்லுாரி முதல்வர் (பொ) சிவக்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ.,பொருளியல், ஆங்கில இலக்கியம், பி.எஸ்.சி.,இயற்பியல், தாவரவியல், வேதியியல், கணினி அறிவியல், காட்சி தொடர்பியல், பி.சி.ஏ., என, 10 இளநிலை பாடப்பிரிவுகளில், 570 இடங்களுக்கான சேர்க்கை அரசு இட ஒதுக்கீடு விதிமுறைப்படி நடக்கிறது.
மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர், முன்னாள் படை வீரர் குழந்தைகள், என்.சி.சி.,மாணவர்கள் மற்றும் சிறப்பு பிரிவினர்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் ஜூன், 2, 3ல் நடக்கிறது. பொது கவுன்சிலிங், 4ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கிறது.

