/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டத்தால் மீண்டும் பீதி
/
அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டத்தால் மீண்டும் பீதி
ADDED : மே 28, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், தாராபுரத்தை அடுத்த அலங்கியம் பகுதி அமராவதி ஆறு, சீத்தக்காடு பகுதியில் கடந்த ஆண்டு முதலை நடமாட்டம் தென்பட்டது. வனத்துறையினர் ஆய்வு செய்து, முதலையை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனாலும் முயயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவ்வழியே சென்ற கூலி தொழிலாளர்கள் கண்ணில் மீண்டும் முதலை தென்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருவதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். வனத்துறையினர் முதலை நடமாட்டம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, கோரிக்கை எழுந்துள்ளது.

