/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மூதாட்டியை கொன்றவரை காவலில் எடுக்க முடிவு
/
மூதாட்டியை கொன்றவரை காவலில் எடுக்க முடிவு
ADDED : ஜூன் 05, 2025 02:30 AM
ஓமலுார், சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, கூக்குட்டப்பட்டி அருகே சின்னேரிகாட்டை சேர்ந்தவர் சரஸ்வதி, 70. கடந்த மே, 20ல், மாடு மேய்க்க சென்றபோது கொலை செய்யப்பட்டடார். அவரது தோடு, மூக்குத்தியை காணவில்லை.
தீவட்டிப்பட்டி போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் மே, 24ல், சங்ககிரி, கோட்டை
யில் இருந்த, ஓமலுார், கட்டிக்காரனுாரை சேர்ந்த நரேஷ்குமார், 26, என்பவரை, சங்ககிரி போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். தொடர்ந்து சேலம் அரசு மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர், சரஸ்வதி மட்டுமின்றி, வீட்டில் தனியே இருக்கும் பெண்களை தாக்கி கொலை செய்து நகைகளை திருடி செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் மீது, 20 வழக்குகள் உள்ளதும், போலீஸ் விசாரணையில் தெரிந்தது. இதனால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க, தீவட்டிப்பட்டி போலீசார் முடிவு செய்து, அதற்கான
நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

