/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெள்ளகோவிலில் நாய் கடித்து மான் சாவு
/
வெள்ளகோவிலில் நாய் கடித்து மான் சாவு
ADDED : பிப் 24, 2024 03:31 AM
காங்கேயம்: வெள்ளகோவில் மற்றும் உப்புபாளையம், கல்லாங்காட்டுவலசு, குருக்கத்தி சேனாபதிபாளையம், கரட்டுப்பாளையம், நாச்சிபாளையம், மயில்ரங்கம் உள்ளிட்ட பகுதி தோட்டங்களில், ஓராண்டுக்கும் மேலாக, தெருநாய்கள் கடித்து குதறியதில், நுாற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன.
இந்நிலையில் கடந்த வாரம் தீத்தாம்பாளையம் அருகே ஒரு நாய் கடித்ததில் மான் பலியானது. கடந்த இரு நாட்களாக வெள்ளகோவில் அருகே நாகநாயக்கன்பட்டி, வெங்கமேடு பகுதிகளில் ஒரு ஆண் மான், நாய் கடியுடன் சுற்றி வந்தது. நேற்று காலை வெங்கமேட்டில் காட்டுப் பகுதியில் இறந்து கிடந்தது. நாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.