/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சஷ்டி-செவ்வாய்-பொங்கலால் குவிந்த பக்தர்கள் சென்னிமலை கோவிலில் போக்குவரத்து நெரிசல்

ADDED : ஜன 17, 2024 10:48 AM
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலுக்கு, செவ்வாய்க்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சஷ்டி திதி, மாட்டு பொங்கல் விழாவுடன், விடுமுறையும் கை கோர்த்ததால், அதிகாலை முதலே பக்தர்கள் குவிய தொடங்கினர்.
இதனால் முருகப்பெருமானை தரிசிக்க, பொது தரிசனத்தில் இரண்டு மணி நேரமும், சிறப்பு தரிசனத்தில் அரை மணி நேரமும் பக்தர்கள் காத்திருக்க நேரிட்டது. பக்தர்கள் கூட்டத்தால் மலை மீது வாகனம் நிறுத்துமிடம், மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மலை கோவிலுக்கு வரும் பாதையை அடைத்து, கோவில் நிர்வாகத்தினர், நெரிசலை சமாளித்து, பக்தர்கள் தரிசனத்துக்கு வழிவகை செய்தனர்.