/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேர்தல் கூட்டணி கொள்கை கூட்டணி அல்ல பா.ம.க., நிர்வாகி 'பரிசுத்தமான' பேச்சு

ADDED : ஜூன் 16, 2025 03:39 AM
ஈரோடு: பா.ம.க., நிறுவனர் ராமதாசால் நியமிக்கப்பட்ட, ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில், ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் கட்சி அலுவலக திறப்பு விழா நேற்று நடந்-தது.
மேற்கு, தெற்கு மண்டல பொறுப்பாளர் பாஸ்கர் திறந்து வைத்து, நிருபர்களிடம் கூறியதாவது: கட்சியில் பொறுப்புகளை மாற்றுவது முரண்பாடு அல்ல. கட்சி பணியை சரியாக செய்யாத-வர்களை மாற்றி அமைத்து பின்னர் மீண்டும் சரியாக செயல்படும் பட்சத்தில் பொறுப்பு வழங்கப்படும். இதற்கு அன்புமணி விதிவி-லக்கல்ல. அவரும் கட்சிக்காரர் தான். அன்புமணிக்கு தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. ராமதாஸ் எதிர்பார்த்த செயல்பாடு இல்-லாததால் செயல் தலைவராக பொறுப்பு வழங்கியுள்ளார். நன்றாக பணிகளை செய்யும் பட்சத்தில் மீண்டும் தலைவர் பொறுப்பை அளிப்பார். பா.ம.க.,வில் தற்போதைய சூழலால் தொண்டர்க-ளுக்குள் குழப்பம் இல்லை. பா.ம.க.,வில் ராமதாஸ் சொல்வ-துதான் முடிவு. தேர்தல் கூட்டணி கொள்கை கூட்டணி அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.