/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி
/
மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி
ADDED : ஜன 27, 2024 04:47 AM
ஈரோடு: மத்திய அரசின் விவசாய விரோத போக்கை கண்டித்து, ஈரோடு, வில்லரசம்பட்டி, 4 ரோட்டில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். அனைத்து வகையான விளை பொருட்களுக்கும் குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்கும் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். 44 தொழிலாளர் நலச்சட்டங்களை, 4 தொகுப்பாக மாற்றியதை திரும்ப பெற வேண்டும்.
அத்யாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி., வரியை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி, அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், டிராக்டர் வாகன பேரணி நடந்தது. ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் துளசிமணி தலைமை வகித்தனர்.
நசியனுார் சாலை, சம்பத் நகர் - 4 ரோடு, பெருந்துறை சாலை, ஈ.வி.என்., சாலை வழியாக ரயில்வே ஸ்டேஷன் சென்று நிறைவடைந்தது. பேரணியில் ஏ.ஐ.டி.யு.சி., சின்னசாமி, கோபால், சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

