/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அக்ரோ ஏஜென்சியில் தீ விபத்து; ஈரோடு அருகே இரவில் பரபரப்பு
/
அக்ரோ ஏஜென்சியில் தீ விபத்து; ஈரோடு அருகே இரவில் பரபரப்பு
அக்ரோ ஏஜென்சியில் தீ விபத்து; ஈரோடு அருகே இரவில் பரபரப்பு
அக்ரோ ஏஜென்சியில் தீ விபத்து; ஈரோடு அருகே இரவில் பரபரப்பு
ADDED : ஜூன் 22, 2024 01:12 AM
ஈரோடு: ஈரோடு அருகே, அக்ரோ ஏஜென்சி உட்பட, இரு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.
ஈரோடு அருகே கரூர் சாலையில், சோலார் மெயின் ரோட்டில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீஅம்மன் அக்ரோ ஏஜென்சி உள்ளது. இங்கு விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களை உற்பத்தி செய்தும், பிற பகுதியில் உற்பத்தி செய்யப்படும் இயந்திரங்களை வாங்கி வந்து விற்பனை செய்யப்படுகிறது. விவசாயத்துக்கு தேவையான பொருட்களும் விற்பனை செய்து வருகிறார். நேற்றிரவு, 10:00 மணி அளரில் கடையில் இருந்து புகை கிளம்பியது.
அக்கம்பக்கத்தினர் தகவலின்படி ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்றனர். அதற்குள் தீயின் வேகம் அதிகரித்ததால், மொடக்குறிச்சி, பள்ளிபாளையம் பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. ஐந்து பெரிய தீயணைப்பு வாகனங்கள், 2 சிறு வாகனங்களுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
2வது தீ விபத்து
அதே பகுதியில் பெருந்துறை சாலையில், செங்கோடம்பள்ளம் பகுதியில் ஒரு கார் டெக்கரேட்டர் கடையிலும் தீப்பிடித்தது. இரவில் ஒரே சமயத்தில் இரு இடங்களில் நேரிட்ட தீ விபத்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அக்ரோ ஏஜென்சியில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியிருக்கலாம் என தெரிகிறது. அதேசமயம் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.