/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
4 ஆண்டுகளாக செக்போஸ்ட் இல்லாமல் கோவை பிரிவை கண்காணிக்க ஆளில்லை
/
4 ஆண்டுகளாக செக்போஸ்ட் இல்லாமல் கோவை பிரிவை கண்காணிக்க ஆளில்லை
4 ஆண்டுகளாக செக்போஸ்ட் இல்லாமல் கோவை பிரிவை கண்காணிக்க ஆளில்லை
4 ஆண்டுகளாக செக்போஸ்ட் இல்லாமல் கோவை பிரிவை கண்காணிக்க ஆளில்லை
ADDED : ஜன 17, 2024 10:50 AM
கோபி: நான்கு ஆண்டுகளாக செக்போஸ்ட் இல்லாமல், கோபி அருகே கோவை பிரிவில், குற்ற சம்பவங்களை கண்காணிக்க வழியின்றி உள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபி சப்-டிவிஷனுக்கு உட்பட்ட கடத்துார் போலீஸ் ஸ்டேஷன் மொத்தம் 19 தாய் கிராமம், 59 குக்கிராமங்களை உள்ளடக்கி, 205 சதுர கி.மீ., பரப்பளவை கொண்டது.
கோபி அருகே கரட்டடிபாளையம் முதல், புதுக்கொத்துக்காடு வரையும், பவானி ஆறு முதல், காவிலிபாளையம் வரையும் எல்லையாக வரையறுக்கப்பட்டுள்ளது. அத்தகைய போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில், கோபி-சத்தி சாலையில் கோவை பிரிவு என்ற இடத்தில், போலீசாரின் கண்காணிப்பு செக்போஸ்ட் முன்பிருந்தது.
அங்கு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் பணியில் இருந்து, கோபி--சத்தி-நம்பியூர் வழியாக செல்லும் வாகனங்களை முன்பு கண்காணித்து வந்தனர். இதனால், குற்றசம்பவங்கள் தடுக்கப்பட்டதுடன், போலீசார் முகாமிட்டிருப்பது கண்டு, வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சமும் இருந்தது. இந்நிலையில் சாலை விரிவாக்க பணிக்காக, கோவை பிரிவு ரவுண்டானா அருகே இருந்த போலீஸ் செக்போஸ்ட், 2019ல், அகற்றப்பட்டது. அதன்பின் பணிகள் முடிந்து, நான்கு ஆண்டுகளை கடந்தும், செக்போஸ்ட் அமைக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் இதுவரை ஆர்வம் காட்டவில்லை.
இதுகுறித்து, கோபி சப்-டிவிஷன் போலீசார் கூறியதாவது: கோபி-சத்தி சாலையில், கடத்துார் போலீஸ் எல்லைக்குள் வாரத்தில் அதிகபட்சம், மூன்று வாகன விபத்துகள் நடக்கிறது. முன்பு கோவை பிரிவில் உள்ள போலீஸ் செக்போஸ்ட்டுக்கு தகவல் தெரிவிப்பர். குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர், வாகனங்களில் தப்பிக்க முயலும்போது, கோபி சப்-டிவிஷன் கேம்ப் ஆபீஸ் மூலம், அத்தகைய சம்பவம் குறித்து, மைக் மூலம் கோவை பிரிவு செக்போஸ்ட்டுக்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்துவர். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக அதற்கு வழியில்லை.
அளுக்குளி, கரட்டுப்பாளையம், காசிபாளையம் பகுதியினர் கோவை பிரிவில், மீண்டும் போலீஸ் செக்போஸ்ட் அமைக்க வலியுறுத்தி வருகின்றனர். அவ்வாறு அமைந்தால் திருட்டு, வழிப்பறி, வாகன விபத்து, மொபைல்போன் டிரைவிங், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோர் போன்றவர்களை கண்காணித்து தடுக்க முடியும்.
இவ்வாறு கூறினர்.
ஈரோடு மாவட்ட எஸ்.பி., முடிவு செய்தால், மீண்டும் அதே இடத்தில் செக்போஸ்ட் அமைக்க முடியும்.

