/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாணவர்களுக்கு தயாராகும் இலவச சைக்கிள்
/
மாணவர்களுக்கு தயாராகும் இலவச சைக்கிள்
ADDED : ஜூலை 16, 2024 01:34 AM
ஈரோடு: அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, ஆண்டுதோறும் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.
நடப்பாண்டுக்கு வழங்க, ஈரோடு ப.செ.பார்க் தகைசால் பள்-ளியில், உதிரி பாகங்களாக வந்தவற்றை ஒருங்கிணைத்து, சைக்கிள் தயாரிக்கும் பணியில், வட மாநில வாலிபர்கள் ஈடுபட்-டுள்ளனர். ஓரிரு நாட்களில் இப்பணி நிறைவு பெற உள்ளது. இங்கு, 800 சைக்கிள்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்-கிருந்து பிற பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று, பள்ளி கல்வி துறையினர் தெரிவித்தனர். இந்தாண்டு புதிய முயற்சியாக சைக்கிள் முன்புறம், தமிழக அரசின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் மிதிவண்டி வழங்கும் திட்டம், 2024-25 எனவும், விழிப்புணர்வு வாசகங்-களும் குறிப்பிடப்பட்டுள்ளது.