/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆப்பில்' அழைத்து வாலிபரை தாக்கி பணம் பறித்த கும்பல்
/
ஆப்பில்' அழைத்து வாலிபரை தாக்கி பணம் பறித்த கும்பல்
ஆப்பில்' அழைத்து வாலிபரை தாக்கி பணம் பறித்த கும்பல்
ஆப்பில்' அழைத்து வாலிபரை தாக்கி பணம் பறித்த கும்பல்
ADDED : ஜூலை 05, 2025 01:32 AM
பெருந்துறை, பெருந்துறை அருகே 'ஆப்பில்' வாலிபரை வரவழைத்து தாக்கி பணம் பறித்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
கரூர், நொய்யல், அண்ணாநகரை சேர்ந்தவர் ஜெகதீசன், 30; பெருந்துறையில் தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டராக உள்ளார். கம்பெனி ஹாஸ்டலில் தங்கியுள்ளார். மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். மொபைல் ஆப்பில் ஒருவரிடம் பேசியதில், பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
இதை நம்பி நேற்று முன்தினம் இரவு பைக்கில், காஞ்சிக்கோவில் ரோடு பாறைக்கடை பஸ் நிறுத்த பகுதிக்கு சென்றார். அங்கு காத்திருந்த ஒருவர், பெண் இருப்பதாக கூறி, காட்டு பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு காத்திருந்த மூவருடன் சேர்ந்து, நான்கு பேரும் ஜெகதீசனை தாக்கியுள்ளனர். ஜி-பே மற்றும் ஏ.டி.எம்.,கார்டு மூலம், 30 ஆயிரம் ரூபாய், பைக்கை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். ஜெகதீசன் புகாரின்படி காஞ்சிக்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.