sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'அரசு கல்லுாரியில் சமையலர், விடுதி வசதி இல்லை': சோறாக்கும் மாணவர்கள்; விருந்தினரான மாணவியர்

/

'அரசு கல்லுாரியில் சமையலர், விடுதி வசதி இல்லை': சோறாக்கும் மாணவர்கள்; விருந்தினரான மாணவியர்

'அரசு கல்லுாரியில் சமையலர், விடுதி வசதி இல்லை': சோறாக்கும் மாணவர்கள்; விருந்தினரான மாணவியர்

'அரசு கல்லுாரியில் சமையலர், விடுதி வசதி இல்லை': சோறாக்கும் மாணவர்கள்; விருந்தினரான மாணவியர்


ADDED : ஜூலை 16, 2024 01:30 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: மொடக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரி இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவியர், மாணவியருக்கு எஸ்.சி., - எஸ்.டி., விடுதியும், மாணவர்களுக்கு சமையலரும் தேவை எனக்கூறி, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் நேற்று மனு வழங்கினர்.மனு வழங்கி அவர்கள் கூறியதாவது: மொடக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரியில், ஈரோடு மட்டுமின்றி திருப்பூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், தஞ்சாவூர், மயிலாடுதுறை, துாத்துக்-குடி, தென்காசி மாவட்ட மாணவ, மாணவியரும் படிக்கிறோம்.

கல்லுாரிக்கு எஸ்.சி., - எஸ்.டி., மாணவியர் விடுதி இல்லை. கடந்-தாண்டு சேர்க்கையின்போது விடுதி இல்லாததால், அவல்பூந்து-றையில் உள்ள பள்ளி மாணவியர் விடுதியில், 32 பேரை தங்க வைத்தனர். அங்கிருந்து வந்து படித்து சென்றோம். மாவட்டத்தில் சித்தோடு, பவானியில் மட்டுமே எஸ்.சி., - எஸ்.டி., மாணவியர் விடுதி உள்ளது. அங்கிருந்து தங்கி தினமும் கல்லுாரிக்கு வந்து செல்ல, 3 பஸ்கள் மாற வேண்டிய நிலை ஏற்படும். இது சாத்திய-மில்லை. எனவே, எங்களுக்கு கல்லுாரி பகுதியில் விடுதி ஏற்ப-டுத்த வேண்டும். அதுவரை தற்காலிக ஏற்பாடு செய்ய வேண்டும். தற்போது நாங்கள் அனைவரும் தெரிந்த மாணவியர் வீடுகளிலும், உறவினர் வீடுகளிலும் தங்கி படிக்கிறோம். இவ்வாறு மாணவியர் கூறினர்.மாணவர்கள் கூறியதாவது: மாணவர்களுக்கு பிற்படுத்தப்-பட்டோர் நல விடுதி உள்ளது. அதில், 120 பேர் தங்கி படிக்கின்-றனர். இங்கு பணி செய்த சமையலர், இடமாறுதலில் வேறு ஊருக்கு சென்றுவிட்டார். கடந்த, 15 நாட்களாக சமையலரின்றி, மாணவர்களே சமைத்து உண்கிறோம். சமைப்பதில் நேரம் போய்விடுவதால் படிக்க முடி-யவில்லை. இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us