/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிவகிரி தம்பதி கொலையில் கைதான மூவருக்கு 'குண்டாஸ்'
/
சிவகிரி தம்பதி கொலையில் கைதான மூவருக்கு 'குண்டாஸ்'
சிவகிரி தம்பதி கொலையில் கைதான மூவருக்கு 'குண்டாஸ்'
சிவகிரி தம்பதி கொலையில் கைதான மூவருக்கு 'குண்டாஸ்'
ADDED : ஜூன் 13, 2025 01:57 AM
ஈரோடு:சிவகிரி முதிய தம்பதி கொலை வழக்கில் கைதான மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே மேகரையான் தோட்டத்தை சேர்ந்த வயதான தம்பதி கொலை வழக்கில், அரச்சலுார், வீரப்பம்பாளையம் ஆச்சியப்பன், 48, தெற்கு வீதி மாதேஸ்வரன், 52, புதுக்காலனி ரமேஷ், 54, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மூவரும் தேங்காய் பறிக்கும் தொழிலாளர்கள். மூவரும், சிவகிரி தம்பதியர் கொலை சம்பவம் மட்டுமின்றி, சென்னிமலை, பல்லடம் உட்பட பல கொலைகளில் ஈடுபட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர்.
மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க, ஈரோடு எஸ்.பி., சுஜாதா பரிந்துரைப்படி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார். இதையடுத்து, ஈரோடு மாவட்ட சிறையில் மூவர் மீதும், குண்டர் சட்டம் பாய்ந்தது. தொடர்ந்து, மூவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.