/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சத்தியமங்கலம் அருகே இடிந்து விழும் நிலையில் வீடுகள்
/
சத்தியமங்கலம் அருகே இடிந்து விழும் நிலையில் வீடுகள்
சத்தியமங்கலம் அருகே இடிந்து விழும் நிலையில் வீடுகள்
சத்தியமங்கலம் அருகே இடிந்து விழும் நிலையில் வீடுகள்
ADDED : அக் 23, 2025 02:00 AM
சத்தியமங்கலம், சசத்தியமங்கலம் அடுத்த கொமாரபாளையம் பஞ்., தாசரி
பாளையம் 1வது வார்டு பள்ளிக்கூடம் பின்புறம், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஓட்டு வில்லை வீடுகள். தற்போது சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும், இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இது பற்றி அப்பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த, 1984ல் அரசு சார்பில் ஓட்டு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக வீடுகள் சிதிலமடைந்து, வீட்டில் மழை ஒழுகுகிறது. கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையால் வீடுகள் முழுவதும் மிகவும் பழுதடைந்து, சுவற்றில் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. உயிர் சேதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.