/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முறைகேடாக நீரேற்றம் 24 இணைப்பு அகற்றம்
/
முறைகேடாக நீரேற்றம் 24 இணைப்பு அகற்றம்
ADDED : ஜூன் 29, 2024 02:45 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. கூட்ட விவாதம் வருமாறு:
பவானி ஆறு, தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன சபை தலைவர் சுபிதளபதி: பவானி ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் முறைகேடாக நீரேற்று பம்புசெட்களை அகற்ற, நீதிமன்ற உத்தரவுப்படி ஜூலை, 2 முதல் ஆய்வு செய்யும்போது, எங்கு செல்கிறோம் என்பதை தெரிவிக்காமல் ஆய்வு செய்ய வேண்டும். குளம், குட்டைகளில் மண் அள்ள அனுமதி வழங்கியும், சட்ட விரோத கும்பல் தடுத்து, முறைகேடு செய்வதை தடுக்க வேண்டும். பவானிசாகர் அணையில் வண்டல் மண் அள்ளுவதில் ஏற்பட்ட முறைகேட்டில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுப்பணித்துறை பொறியாளர்கள்: பவானிசாகர் அணையில் வண்டல் மண் எடுக்கும் பிரச்னையில், சுமூகமாக தீர்வு காணப்பட்டுள்ளது. நீர் திருட்டை தடுக்கும் வகையில், கீழ்பவானி வாய்க்கால் பகுதியில், 22 பைப்லைன் அகற்றப்பட்டு, 26 கிணறுக்கான இணைப்பு அகற்றப்பட்டுள்ளது. மற்றவற்றுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளோம். பவானி ஆற்றுப்பகுதியில், 2 பெரிய இணைப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மற்றவை ஜூலை, 2க்குப்பின் ஆய்வின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கம் சுதந்திரராசு: கர்நாடகாவில் பந்து கொப்பரை தேங்காய்
ஒரு கிலோ, 85 ரூபாய்க்கு வாங்கி, இங்கு கொண்டு வந்து நேபெட் விற்பனை நிலையங்களில், 115 ரூபாய்க்கு விற்பதை தடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.