/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரவை இயந்திரம் பெற கைம்பெண்களுக்கு அழைப்பு
/
அரவை இயந்திரம் பெற கைம்பெண்களுக்கு அழைப்பு
ADDED : செப் 19, 2025 02:40 AM
ஈரோடு :கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மகளிருக்கு, பொருளாதார ரீதியாக வலுப்பெற, 10,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரம் வாங்க, மொத்த விலையில், 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக, 5,000 ரூபாய் மானியத்தொகை வழங்கப்படும். திட்டத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பிறப்பிட சான்று, 25 வயதுக்கு மேற்பட்டோர், பிறந்த தேதி சான்று, வருமான சான்று வழங்க வேண்டும். தகுதியானவர்கள் வரும், 30க்குள், ஈரோடு கலெக்டர் அலுவலகம், ஆறாம் தளத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம்.