/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
108 ஆம்புலன்ஸ் மூலம் கடந்த ஆண்டு 59,270 பேர் பயன் பெற்றதாக பெருமிதம்
/
108 ஆம்புலன்ஸ் மூலம் கடந்த ஆண்டு 59,270 பேர் பயன் பெற்றதாக பெருமிதம்
108 ஆம்புலன்ஸ் மூலம் கடந்த ஆண்டு 59,270 பேர் பயன் பெற்றதாக பெருமிதம்
108 ஆம்புலன்ஸ் மூலம் கடந்த ஆண்டு 59,270 பேர் பயன் பெற்றதாக பெருமிதம்
ADDED : ஜன 10, 2024 10:58 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்தாண்டு, 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம், 59 ஆயிரத்து, 270 பேர் பயன் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் விபத்து, அவசர கால மருத்துவ உதவிக்கு, 108 ஆம்புலன்ஸ் இலவசமாக இயக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில், 52 ஆம்புலன்ஸ் இயங்குகிறது. அவசர அழைப்பு வந்த, 8 முதல், 14 நிமிடங்களில் நகர்புறம் மற்றும் கிராமப் புறங்களில் சேவை வழங்கப்படுகிறது.
இந்நேரத்தை மேலும் குறைக்கவும், அவசர காலத்தில் விரைவான சேவை வழங்க ஜி.பி.எஸ்., கருவி, ஆம்புலன்ஸில் பொருத்தி உள்ளனர். அழைப்பவரின் இடத்தை துல்லியமாக அறிய, ஆம்புலன்ஸ்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டுள்ளது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த, 2023ல் ஈரோடு மாவட்டத்தில், 108 ஆம்புலனஸ் வாகனத்தை, 59 ஆயிரத்து, 270 பேர் அழைத்து பயன் பெற்றுள்ளனர். குறிப்பாக, 16 ஆயிரத்து, 826 கர்ப்பிணிகள் பிரசவத்துக்கு பயன்படுத்தினர். விலங்குகள் தாக்கியதாக காயமடைந்த, 1,087 பேர், சாலை விபத்தில் காயமடைந்த, 11 ஆயிரத்து, 347 பேர், வாகனங்கள் அல்லாத பிற விபத்துக்களில் காயமடைந்த, 4,055 பேர் மீட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுவாச பிரச்னைக்காக, 3,011 பேர், இயற்கை பேரிடர், மழை, வெள்ள பாதிப்பில், 27 பேர், தற்கொலைக்கு முயன்றதாக, 582 பேர் இச்சேவையால் பயன் பெற்றுள்ளனர். தொழில் நிறுவன விபத்தில், 13 பேர், தீ விபத்தில் காயமடைந்த, 219 பேர், தீவிர காய்ச்சல் பாதித்த, 2,393 பேர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
இச்சேவையை மேலும் செம்மைப் படுத்த, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்பகுதிகள், கர்ப்பிணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
கர்ப்பிணிகள் உட்பட அனைத்து நோயாளிகளும் இலவசமாக, 108 ஆம்புலன்ஸ் சேவையை, 24 மணி நேரமும் பயன்படுத்தி கொள்ளலாம். இத்தகவலை, ஈரோடு மாவட்ட 108 ஆம்புலன்ஸ் திட்ட மேலாளர் குமரன் தெரிவித்துள்ளார்.

