/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்
/
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்
ADDED : ஜன 26, 2024 10:11 AM
ஈரோடு: ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் ரத்தன் பிரத்வி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கலைப்பிரிவு செயலாளர் சினிமா இயக்குனர் உதயகுமார் பேசினார். மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமை வகித்து பேசினார். கூட்டத்தில் முன்னாள் எம்.பி., செல்வகுமார சின்னையன், பகுதி செயலாளர்கள் மனோகரன், ஜெகதீசன், கேசவமூர்த்தி, தங்கமுத்து, ஜெயராஜ், ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
இதேபோல் ம.தி.மு.க. சார்பில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், மரப்பாலத்தில் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் முருகன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் கோபால், மாரிமுத்து, தங்கவேல், வீரக்குமரன், ரகுபதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கொள்கை விளக்க அணி செயலாளர் வந்தியத்தேவன், ஈரோடு நாடாளுமன்ற தொகுதி இணையதள பொறுப்பாளர் கபிலன் கணேசமூர்த்தி, மொழிப்போர் தியாகி சென்னியப்பன் சிறப்புரையாற்றினர். முன்னதாக மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்துக்கு, மரியாதை செலுத்தினர்.

