/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விவசாயி வீட்டில் திருடியவர் கைது; 3.5 பவுன் நகை மீட்பு
/
விவசாயி வீட்டில் திருடியவர் கைது; 3.5 பவுன் நகை மீட்பு
விவசாயி வீட்டில் திருடியவர் கைது; 3.5 பவுன் நகை மீட்பு
விவசாயி வீட்டில் திருடியவர் கைது; 3.5 பவுன் நகை மீட்பு
ADDED : ஜூன் 08, 2024 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில்: வெள்ளகோவில், டி.ஆர்.நகரை சேர்ந்த விவசாயி பெரியசாமி, 58; கடந்த மாதம், 19ம் தேதி இவரது வீட்டில் தங்க மோதிரம், நகை, தோடு என நான்கு பவுன் நகை, 500 கிராம் எடையிலான இரு வெள்ளி காமாட்சி விளக்கு திருட்டு போனது. இதுகுறித்த புகாரின்படி வெள்ளகோவில் போலீசார், மர்ம ஆசாமியை தேடி வந்தனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த தமிழரசு, 24, என்பவரை கைது செய்தனர். ஈரோடு, குமலன்குட்டை, குமரன் நகரில் வசித்து வருவதும் தெரிய வந்தது. அவரிடம், 3.5 பவுன் நகையை மீட்டனர். காங்கேயம் கேர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை சிறையில் போலீசார் அடைத்தனர்.