/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மர்மமாக இறந்து கிடந்த மார்க்கெட் வியாபாரி
/
மர்மமாக இறந்து கிடந்த மார்க்கெட் வியாபாரி
ADDED : ஜூன் 14, 2025 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, வி.வி.சி.ஆர்.நகர், அய்யனாரப்பன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல், 44; வ.உ.சி., பூங்கா காய்கறி மார்க்-கெட்டில் கடை நடத்தி வந்தார். மனைவி சண்முகபிரியா, 3 மகள்கள் உள்ளனர்.
குடிப்பழக்கம் கொண்ட தங்கவேல் நேற்று முன்தினம் மதியம், மார்க்கெட்டுக்கு செல்லும்போது, மது குடித்துவிட்டு கடைக்கு செல்லாமல் வீட்டின் வெளிப்பகுதியில் துாங்கினார். இதனால் சண்முகப்பிரியா கடைக்கு சென்றுவிட்டார். மாலையில் வீட்டுக்கு வந்தபோதும் துாங்கியபடி இருந்த கணவரை எழுப்பினார். அப்போது வயிறு, வாய் பகுதியில் ரத்தத்துடன் இறந்து கிடந்தார். சாவுக்கான காரணம் குறித்து ஈரோடு டவுன் போலீசார் விசாரிக்-கின்றனர்.