ADDED : ஜூலை 15, 2024 12:52 AM
தாராபுரம்: பலரை திருமணம் செய்து ஏமாற்றிய வழக்கில், தேடப்பட்டு வந்த வைரல் பெண்ணை, தாராபுரம் மகளிர் போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் அரவிந்த்.
சமூக வலைதளத்தில் அறிமுகமான ஈரோடு மாவட்டம் கொடு-முடி பகுதியை சேர்ந்த சத்யா என்பவரை திருமணம் செய்தார். இரண்டாவது நாளிலேயே சத்யா ஏற்கனவே திருமணமானவர் என தெரிந்தது. இதுகுறித்து தாராபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். போலீசாரோ சத்யா மற்றும் அவருக்கு உதவியவரும் புரோக்கருமான தமிழரசியை அழைத்து விசாரித்து அனுப்பி விட்டனர். அதேசமயம் மகேஷ் அரவிந்த் புகாரில் வழக்-குப்பதிவு செய்து விசாரிக்கையில், பலரை சத்யா ஏமாற்றி திரு-மணம் செய்தது தெரிந்தது. இதையடுத்து அவரை தேடி வந்தனர். மொபைல்போன் சிக்னல் மூலமாக, பாண்டிச்சேரியில் இருப்-பதை அறிந்த போலீசார், நேற்று முன்தினம் இரவு அங்கு சென்-றனர். சத்யாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். தாராபுரம் அழைத்து வந்த போலீசார், மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.