/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம ஆசாமி
/
மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம ஆசாமி
ADDED : மே 11, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம், டி.என்.பாளையம் அருகேயுள்ள பங்களாப்புதுார், திருமலை நகரை சேர்ந்தவர் ராசம்மாள், 62; அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று மதியம், 1:30 மணி அளவில் ஹெல்மெட் அணிந்த ஒரு ஆசாமி கடைக்கு வந்து, தயிர் பாக்கெட் கேட்டுள்ளார்.
அவர் எடுத்து கொடுத்தபோது, ஹெல்மெட்டால் ராசம்மாளை தாக்கி, தாலிக்கொடியை பறித்துள்ளார். ராசம்மாள் தாலியை பற்றியபடி கூச்சலிட்ட நிலையில், ஆசாமியும் நகையை பறிக்க குண்டுமணி மட்டும் அவன் கைக்கு சென்றது. அத்துடன் ஆசாமி ஓடிவிட்டார். ராசம்மாள் புகாரின்படி மர்ம ஆசாமியை, பங்களாப்புதுார் போலீசார் தேடி வருகின்றனர்.

