தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தேர்தல் பணி வேண்டாம்அதிகரிக்கும் விண்ணப்பம்

தேர்தல் பணி வேண்டாம்அதிகரிக்கும் விண்ணப்பம்

தேர்தல் பணி வேண்டாம்அதிகரிக்கும் விண்ணப்பம்


ADDED : மார் 24, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 05:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடுஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணியில், அரசு ஊழியர், ஆசிரியர்கள், போலீஸ், ஊரக வளர்ச்சி துறை, உள்ளாட்சி துறை, சுகாதாரத்துறையினர், துாய்மை பணியாளர்கள், தபால் மற்றும் பி.எஸ்.என்.எல்., அலுவலர்கள், ஓய்வு பெற்ற போலீஸ் மற்றும் ராணுவ வீரர் என, 11,000 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் சார்ந்த துறை மூலமும், எட்டு சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்திலும், தங்களை தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க கோரி, பல விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.

இதுபற்றி தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:

ஒவ்வொரு தேர்தலின் போதும், தேவையை விட கூடுதலாக குறிப்பிட்ட பணிக்கு, 20 சதவீதம், சில பணிக்கு, 5 முதல், 10 சதவீத பணியாளர் தேர்வு செய்யப்படுவர். அனைவருக்கும் பயிற்சி வழங்கி, பணி ஒதுக்கீடு வழங்கினாலும், கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாமல் சிலர் வர முடியாமல் போகும். அவர்களுக்காக கூடுதல் நபர்களை பணியமர்த்துவோம்.

தேர்தல் பணி ஒதுக்கீடு என்பது கட்டாயம். வர இயலாது என தெரிவிக்க கூடாது. கடந்த தேர்தலைவிட இத்தேர்தலில் இதுவரை, 200க்கும் மேற்பட்டோர் தங்களை விடுவிக்க கோரி விண்ணப்பம், ஆவணங்கள், பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பார்வைக்கு கொண்டு சென்று முடிவு செய்யப்படும். இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us