/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கவுந்தப்பாடி அருகே ஒருவழிப்பாதையில் பயணம் தார்ச்சாலை பணியால் விபத்து அபாயம்

ADDED : மே 13, 2025 01:44 AM
கோபி :கவுந்தப்பாடி--சித்தோடு வழியில், கரட்டுப்பாளையத்தை கடந்து, தயிர்பாளையம் பிரிவு வரை, பிரதான ஈரோடு சாலையின் நடுவே சென்டர் மீடியன் வைக்கப்பட்டுள்ளது.
சில நாட்களாக தயிர்பாளையம் பிரிவு அருகே பிரதான சாலையில், சென்டர் மீடியன் மற்றும் தார்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக தயிர்பாளையம் வரை, ஈரோடு சாலையில், வாகனங்கள் சாலையில் செல்ல தடை விதித்து, கரட்டுப்பாளையம் பிரிவு அருகே, ஒருவழியில் பேரிகார்டு வைத்து அடைத்துள்ளனர்.
இதனால் ஈரோடு மற்றும் சத்தியை நோக்கி பயணிக்கும் வாகனங்கள், மற்றொரு வழியான ஒருவழிப்பாதையில் எதிரெதிரே பயணிக்கின்றன. இதனால் பகல் நேரத்தை காட்டிலும், இரவு மற்றும் அதிகாலை நேரத்தில், வாகனங்கள் நேருக்குநேர் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் போக்குவரத்து வழி மாற்றம் குறித்து கரட்டுப்பாளையம் பிரிவில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், எச்சரிக்கை, அறிவிப்பு பலகை என எதுவும் வைக்கப்படவில்லை.
விபத்து நடந்து விளக்கம் அளிப்பதற்கு முன், எச்சரிக்கை மற்றும் அறிவிப்பு வைத்து, சாலை பணியை மேற்கொள்ள வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.