/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீடு தேடி ரேஷன் பொருள் திட்டம் பெருந்துறையில் நாளை தொடக்கம்
/
வீடு தேடி ரேஷன் பொருள் திட்டம் பெருந்துறையில் நாளை தொடக்கம்
வீடு தேடி ரேஷன் பொருள் திட்டம் பெருந்துறையில் நாளை தொடக்கம்
வீடு தேடி ரேஷன் பொருள் திட்டம் பெருந்துறையில் நாளை தொடக்கம்
ADDED : ஜூலை 02, 2025 01:10 AM
ஈரோடு, மிழக அரசு, 70 வயதுக்கு மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு, வீட்டுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக ஈரோடு உட்பட, 10 மாவட்டங்களில் திட்டத்தை பரிட்சார்த்தமாக செயல்படுத்தப்படவுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதியில் நேற்று இப்பணி துவங்கியது. ஈரோடு மாவட்டத்தில் நாளை தொடங்குகிறது.
இதுபற்றி கூட்டுறவு மற்றும் மாவட்ட வழங்கல் பிரிவு அதிகாரிகள்
கூறியதாவது:
முதற்கட்டமாக மாவட்டத்தில் பெருந்துறை தாலுகாவில் குறிப்பிட்ட கடைகளில், 700 பயனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்று, 10 கடைகளின் கீழ் உள்ள, 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு சென்று பொருட்களை வழங்குகிறோம்.
இதற்கான நேரம், செலவு, பயனாளிக்கு தேவையான பொருள், வாகன வசதி, எதிர் நோக்கும் பிரச்னைகளை அரசிடம் தெரிவிப்போம். இவை முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, மாவட்ட அளவில் விரிவாக்கம் செய்யப்படும். இவ்வாறு கூறினர்.