/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வால் கீழ்பவானி பாசனத்துக்கு ஒரு போகம் உறுதி
/
பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வால் கீழ்பவானி பாசனத்துக்கு ஒரு போகம் உறுதி
பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வால் கீழ்பவானி பாசனத்துக்கு ஒரு போகம் உறுதி
பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வால் கீழ்பவானி பாசனத்துக்கு ஒரு போகம் உறுதி
ADDED : ஜூன் 08, 2025 12:53 AM
ஈரோடு, கடந்தாண்டை ஒப்பிடுகையில் தற்போது பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், கீழ்பவானி பாசனம் ஒரு போகம் உறுதியாகும், என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணை நீர் மூலம் கீழ்பவானி, காளிங்கராயன், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில் 2.50 லட்சம் ஏக்கர் நேரடியாகவும், 1 லட்சம் ஏக்கருக்கு மேல் மறைமுக பாசனமும் பெறுகின்றன.
கடந்தாண்டு கடும் வறட்சி, மழை குறைவால் அணை நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது. நடப்பாண்டில் கோடை மழை, தென்மேற்கு பருவமழையால் நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் கடந்த, மே, 24 முதல் பவானி ஆற்றில் நீர் வரத்து துவங்கியது.
கடந்த, 24ம் தேதி மாலை அணை நீர்மட்டம், 69.90 அடியாக இருந்தது. நேற்று மதியம், 83.08 அடியாக இருந்தது. அதாவது கடந்த, 14 நாட்களில் அணை நீர்மட்டம், 14 அடி உயர்ந்துள்ளது. கடந்தாண்டு இதே நாளில், 56.25 அடியாக நீர்மட்டும் இருந்தது. இதனால் கீழ்பவானி பாசன விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதுபற்றி தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி கூறியதாவது: அணையில் தற்போது, 83.08 அடி நீர் உள்ளதால், கீழ்பவானியில் ஒரு போக பாசனம் உறுதியாகும். ஜூன், 16ல் காளிங்கராயன் வாய்க்காலில் நீர் திறக்க வேண்டும். ஆக., 16ல் கீழ்பவானியில் நீர் திறக்க வேண்டும். அதற்குள் பருவமழை பெய்து, நீர்வரத்துக்கும் வாய்ப்புள்ளது.
தற்போது அணையில் நீர் இருப்பு உள்ளதால், ஆக.,16க்கு பதில், 10 நாட்கள் முன்னதாகவே தண்ணீர் திறந்தால் தொழிலாளர் பிரச்னை, இயந்திர தட்டுப்பாடு வராது. மாவட்ட நிர்வாகம் முறையாக திட்டமிட வேண்டும்.
இவ்வாறு கூறினார்.