/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகரில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
/
மாநகரில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜூலை 02, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாநகரில் மேட்டூர் ரோடு, சத்தி ரோடு, ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில், கடைக்காரர்கள் சாலைகளை ஆக்கிரமித்துள்ளனர்.
இதனால் இந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாகி விட்டது. இந்நிலையில் மணிக்கூண்டை அடுத்த எல்லை மாரியம்மன் கோவில் அருகே சத்தி ரோட்டின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு கடைகள், பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் நேற்று அகற்றினர்.