/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாகர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
சாகர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : செப் 19, 2025 01:11 AM
பெருந்துறை, :பெருந்துறை சாகர் பள்ளியில் 'அன்றாட வாழ்வில் அறிவியல்' எனும் தலைப்பில் அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது. பள்ளி தாளாளர் சௌந்திரராஜன் தொடங்கி வைத்தார். முதல்வர் ஷீஜா, கல்வி இயக்குநர் ஐசக் பிரபுகுமார், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை, 600 மாணவர்கள், தங்களது செயல் திட்டங்களை மாதிரிகளாகவும், விளக்க காட்சிகளாகவும் தயாரித்திருந்தனர்.
மாதிரிகளை மதிப்பீடு செய்ய பல்வேறு பொறியியல் கல்லுாரிகளை சேர்ந்த நடுவர் குழு அமைக்கப்பட்டது. கண்காட்சியில் 'பிளாஸ்மா கெனான்', 'டெஸ்லா காயில்', 'ரேடார் செக்யூரிட்டி சிஸ்டம்' 'கேப்ஸ்யூல் எஜக்ஸன் சிஸ்டம் இன் பிளெய்ன்' 'எர்த் க்வேக் டிடக்டர்', 'பிளாஸ்மா ஜெனரேட்டர்' போன்ற படைப்புகள், சிறந்தவையாக தேர்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.