ADDED : மே 30, 2025 01:01 AM
ஈரோடு :ஈரோடு அருகே திண்டல் யு.ஆர்.சி.நகரில், எஸ்.எஸ்.எஸ். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடந்தது. மருத்துவமனை தலைவர் சரவணபவன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் டாக்டர் சஞ்சித், மருத்துவ இயக்குனர் டாக்டர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர். உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுனருமான சதாசிவம், உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
விழாவில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி, முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா, பிரகாஷ் எம்.பி., சந்திரகுமார் எம்.எல்.ஏ., மேயர் நாகரத்தினம், வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சந்திரசேகர், கிரீன் பீல்டு கட்டுமான நிறுவன உரிமையாளர் சதாசிவம், இந்து கல்வி நிலைய தலைவர் கே.கே.பாலுசாமி, சண்முகா குழும நிறுவனங்களின் தலைவர் ராஜமாணிக்கம், கே.கே.எஸ்.கே. இண்டர்நேஷனல் நிறுவன உரிமையாளர் ரபீக், எம்.சி.ஆர். நிறுவன உரிமையாளர் ராபின் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

