/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சத்திரிய சான்றோர் படை சார்பில் மனு வழங்கல்
/
சத்திரிய சான்றோர் படை சார்பில் மனு வழங்கல்
ADDED : ஜூலை 23, 2024 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், சத்திரிய சான்றோர் படை தலைவர் ஹரி நாடார், அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்க நிறுவன தலைவர் சதா நாடார் முன்னிலையில் மனு வழங்கினர்.
மனுவில் கூறியதாவது: சுதந்திர போராட்ட வீரன் தீரன் சின்னமலையுடன் சேர்ந்து முதல் சுதந்திர போராட்ட தியாகி குணாளன் நாடார் பங்கேற்ற வரலாற்றை, சிலர் கொச்சைப்படுத்துகின்றனர். குறிப்பாக கொங்கு வெள்ளாள கவுண்டர் சங்க சேலம் மாவட்ட தலைவர் சுகுமார், இரு சமூகத்துக்கு இடையே மோதல், கலவரம் ஏற்படும் வகையில் பல்வேறு தளங்களில் பதிவு செய்து வருகிறார். அவரை கண்டிப்பதுடன், அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.