தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோட்டில் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

ஈரோட்டில் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

ஈரோட்டில் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்


ADDED : ஜன 28, 2024 10:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2024 10:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் (டிட்டோ-ஜாக்) நேற்று ஈரோட்டில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர்கள் சரவணன், கோபால

கிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மணி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் டிட்டோ ஜாக்கின் உயர்மட்ட குழு உறுப்பினர் முத்து ராமசாமி போராட்டத்தை துவக்கி வைத்து கோரிக்கை குறித்து பேசினார்.

தொடக்க கல்வித்

துறையில் பணிபுரியும், 90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்க கூடிய மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகள் தொடர்பான எழுத்துப்பூர்வமான ஆணைகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

தமிழக ஆசிரியர் கூட்டணின் மாநில மகளிரணி செயலாளர் ரமாராணி, மாவட்ட தொடக்க பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us