/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பழனியாண்டவர் கோவிலில் தைப்பூச விழா தேரோட்டம்
/
பழனியாண்டவர் கோவிலில் தைப்பூச விழா தேரோட்டம்
ADDED : ஜன 27, 2024 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: பவானி, கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலின், உப கோவிலான பழனியாண்டவர் கோவிலில், தைப்பூச திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. ஈரோடு மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சிவக்குமார், தி.மு.க., நகர செயலாளர் நாகராசன், நகர்மன்ற தலைவர் சிந்துாரி, இணை ஆணையர் சுவாமிநாதன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
காவேரி வீதி, மேட்டூர் ரோடு, கிழக்குக் கண்ணார வீதி, தேர் வீதி, கீரைக்காரத் தெரு, பூக்கடை வீதி வழியாக மீண்டும் தேர்நிலை சேர்ந்தது. தேரோட்டம் செல்லும் வழியெங்கும் ஏராளமான பக்தர்கள் பூக்
களை துாவி, முருகப்பெருமானை வழிபட்டனர்.

