/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபி உழவர் சந்தை குளிர்பதன கிடங்கு கதவுக்கு ஓராண்டாக குச்சியால் முட்டு கொடுக்கும் அவலம்

ADDED : மே 12, 2025 03:59 AM
கோபி: கோபி உழவர் சந்தை குளிர்பதன கிடங்கு கதவில் ஏற்பட்ட கோளாறால், ஓராண்டாக குச்சியால் முட்டு கொடுத்து வியாபாரிகள் பயன்படுத்தி அவதியுறுகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே மொடச்சூரில், 2000 அக்.,23ல் தி.மு.க., ஆட்சியில், உழவர் சந்தை துவங்கப்பட்டது. தற்போது, 15க்கும் குறைவானவர்களே வியாபாரம் செய்கின்றனர். விவசாயிகள் காய்கறிகளை இருப்பு வைத்து விற்க வசதியாக, சில ஆண்டுகளுக்கு முன், உழவர் சந்தை வளாகத்தில், ஐந்து டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு கட்டினர். சோலார் மற்றும் மின் இணைப்பு வசதியுடன் இயங்கும், கிடங்கின் கதவு தானாக மூடிக்கொள்ளும் வகையில் தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டிருந்தது. ஓராண்டுக்கு முன் கதவு தானாக மூடிக்கொள்ளும் வசதியில் கோளாறு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மூங்கில் குச்சியால் முட்டுகொடுத்து பயன்படுத்தி அவதியுறுகின்றனர். பல முறை அதுகுறித்து உழவர் சந்தை நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை என்பது புகாராக உள்ளது.