/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநாடு பேனர்களை அகற்றிய நகராட்சி இந்து முன்னணியினர் சாலை மறியல்
/
மாநாடு பேனர்களை அகற்றிய நகராட்சி இந்து முன்னணியினர் சாலை மறியல்
மாநாடு பேனர்களை அகற்றிய நகராட்சி இந்து முன்னணியினர் சாலை மறியல்
மாநாடு பேனர்களை அகற்றிய நகராட்சி இந்து முன்னணியினர் சாலை மறியல்
ADDED : ஜன 27, 2024 04:40 AM
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியில் இந்து முன்னணி மாநாடு தொடர்பாக, நகராட்சி பகுதிகளில், 15க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது. உரிய அனுமதி பெறாததால், பேனரை அகற்ற நகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தினர். நேற்று காலை வரை அகற்றாததால், ஊழியர்கள் அகற்றி, வாகனத்தில் ஏற்றி நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இதையறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள், நகராட்சி அலுவலகத்துக்கு சென்றனர். பிளக்ஸ் பேனர் வைக்க அரசியல் கட்சிகளுக்கு மட்டும் எப்படி அனுமதி வழங்குகிறீர்கள்? எனக்கேட்டு வாக்குவாதம் செய்தனர்.
இந்நிலையில் பவானிசாகர் சாலை பிரிவு அருகே வைக்கப்பட்டிருந்த பேனரை, ஊழியர்கள் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சத்தி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது. புளியம்பட்டி போலீசார் பேச்சுவார்த்தையால், மறியலை கைவிட்டனர். பின், பேனர்களை அகற்றிய நகராட்சியை கண்டித்து, ஆதிபாராசக்தி அம்மன் கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபடவே போலீசார் குவிக்கப்பட நாள் முழுவதும் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் பேனர்களை வைக்க தலா, 500 ரூபாய் வீதம், நான்கு பேனருக்கு, 2,000 ரூபாய் கொடுத்து, இந்து முன்னணியினர் ரசீது பெற்றனர். இதையடுத்து நான்கு பேருக்கு அனுமதி கிடைத்தது.

