/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தம்பதி கொலையில் கைதான மூவரிடம் ஆயுதப்படை வளாகத்தில் விசாரணை
/
தம்பதி கொலையில் கைதான மூவரிடம் ஆயுதப்படை வளாகத்தில் விசாரணை
தம்பதி கொலையில் கைதான மூவரிடம் ஆயுதப்படை வளாகத்தில் விசாரணை
தம்பதி கொலையில் கைதான மூவரிடம் ஆயுதப்படை வளாகத்தில் விசாரணை
ADDED : ஜூன் 15, 2025 01:45 AM
ஈரோடு சிவகிரி தம்பதி கொலை வழக்கில் கைதான, அறச்சலுாரை சேர்ந்த ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷிடம், ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை வளாகத்தில், போலீஸ் கஸ்டடி விசாரணை நேற்று தொடங்கியது. இதனால் ஆயுதப்படை வளாக நுழைவாயில் முன், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இங்கு வரும் அனைவரும், வாகனங்கள் உள்பட அனைத்தும் பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. விசாரணை அதிகாரியான ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன், மூவரிடமும் தனித்தனியே விசாரணை மேற்கொண்டுள்ளார். இது வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கஸ்டடி விசாரணைக்கு மூன்று நாட்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறைவான அவகாசம் என்பதால், சிவகிரி தம்பதி கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படும்.
இம்மூவரின் பிற வழக்குகள் (சென்னிமலை கொலை வழக்குகள் உள்ளிட்டவை)குறித்து விசாரிக்க வாய்ப்புள்ளதா? என்பதை விசாரணை அதிகாரியே முடிவு செய்வார். கொலை செய்தது எப்படி என்பதை மூவரும் செய்து காட்ட, சம்பவம் நடந்த மேகரையான் தோட்டத்துக்கு அழைத்து செல்லப்படலாம். இவர்கள் தொடர்புடைய பிற வழக்குகள் குறித்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டால், மீண்டும் நீதிமன்றத்தை அணுகி மூவரையும் கஸ்டடி எடுக்கவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர்.