/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாரில் பணம் கேட்டு மிரட்டிய த.வா.க., நிர்வாகிகள் கைது
/
பாரில் பணம் கேட்டு மிரட்டிய த.வா.க., நிர்வாகிகள் கைது
பாரில் பணம் கேட்டு மிரட்டிய த.வா.க., நிர்வாகிகள் கைது
பாரில் பணம் கேட்டு மிரட்டிய த.வா.க., நிர்வாகிகள் கைது
ADDED : மே 11, 2025 01:17 AM
பவானி, பவானி அடுத்த லட்சுமி நகரில், தனியார் மதுக்கடை பார் செயல்பட்டு வருகிறது. ஈரோட்டை சேர்ந்த கனகராஜ் நடத்தி வருகிறார். கடந்த, 7ல் பாருக்கு போன் செய்த ஒருவர், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்த சாதிக் பாஷா, 42, என கூறியுள்ளார். நாற்காலி பத்திரிக்கை திண்டுக்கல் மாவட்ட நிருபர் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி மடத்துக்குளம் சட்டமன்ற பொறுப்பாளராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாரில் சட்டவிரோத மது விற்பனை நடப்பது குறித்து செய்தி வெளியிடாமல் இருக்க, மூன்று லட்சம் ரூபாய் தரவேண்டும். தாராபுரம், கந்தசாமிபாளையத்தை சேர்ந்தவர் சரவணன், 32; திருப்பூர் கிழக்கு மாவட்ட த.வா.க., செயலாளராக உள்ளார். அவரிடம் பணத்தை கொடுத்து விடுங்கள் எனக்கூறியுள்ளார். இதுகுறித்து பவானி டி.எஸ்.பி.,யிடம் புகார் தரப்பட்ட நிலையில், சித்தோடு போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார். போலி நிருபர் தெரிவித்த முகவரிக்கு சென்ற போலீசார், சாதிக்பாட்ஷா,
சரவணனை கைது செய்தனர்.

