/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புதிதாக கண்டறியப்பட்ட 192 தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை
/
புதிதாக கண்டறியப்பட்ட 192 தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை
புதிதாக கண்டறியப்பட்ட 192 தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை
புதிதாக கண்டறியப்பட்ட 192 தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை
ADDED : ஜன 27, 2024 03:54 PM
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் புதிதாக கண்டறியப்பட்ட, 192 தொழுநோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து மாவட்ட தொழுநோய் ஒழிப்பு திட்ட நலக்கல்வியாளர் பழனிசாமி கூறியதாவது: உலக அளவில் உள்ள தொழுநோயாளிகளில், 50 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர்.
வரும், 2027க்குள் தொழுநோய் இல்லாத தேசத்தை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில், 1,000 பேரில், 0.5 சதவீதமும், ஈரோடு மாவட்டத்தில், 0.76 சதவீதம் பேரும் தொழுநோயாளிகள் உள்ளனர். இந்நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் குணப்படுத்தலாம். 45 சதவீதத்துக்கு மேல் தொழுநோய் பாதித்து, உறுப்பு குறைபாடு ஏற்பட்டால், 2,000 ரூபாய் உதவித்தொகை பெறலாம். மாவட்டத்தில், 490 பேர் உதவித்தொகை பெறுகின்றனர். புதிதாக கண்டறியப்பட்ட, 192 பேருக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. தொழுநோய் மருத்துவ பிரிவில் மட்டும் சிகிச்சை மற்றும் மருந்து வழங்கப்பட்டது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளதால், அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிகிச்சை, மருந்து வழங்கப்படுகிறது. விண்ணப்பள்ளியில் அரசு மறுவாழ்வு மையத்தில், அதிக பாதிப்புடைய, 50 பேர் தங்கி சிகிச்சை பெறும் வசதி உள்ளது. இவ்வாறு கூறினார்.

