/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மண் கடத்திய லாரி விபத்தால் தீயில் எரிந்தது டிரைவர் தப்பி ஓட்டம்; காங்கேயத்தில் 'பகீர்'

ADDED : ஜூன் 11, 2025 01:37 AM
காங்கேயம்,காங்கேயம் அருகே கோவை-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று அதிகாலை டிப்பர் லாரியில் தீ விபத்து ஏற்பட்டது. காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். இதுகுறித்து விசாரித்த காங்கேயம் போலீசார் கூறியதாவது:
தீப்பிடித்து எரிந்த லாரி, குங்காருபாளையத்தை சேர்ந்த செந்தில்குமாருக்கு சொந்தமானது. லாரியில் இரவில் கிராவல் மண் கடத்தி சென்று வந்துள்ளனர். அதேபோல் நேற்று முன்தினம் இரவும், 5 யூனிட் கிராவல் மண் ஏற்றி சென்ற போது விபத்தில் சிக்கியுள்ளது. போலீசார் விசாரணைக்கு பயந்து லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இவ்வாறு போலீசார் கூறினர். காங்கேயம் பகுதியில் அதிகாரிகள் துணையுடன், 50 லாரிகளில் தினமும் கிராவல் மண் கடத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்ட உயர் அதிகாரிகள் விசாரித்து, உரிய நடவடிக்க எடுக்க வேண்டும் என்றும், மக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.