/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தோட்டத்து வீட்டில் மூதாட்டியை கொன்ற தாளவாடியை சேர்ந்த இருவர் கைது
/
தோட்டத்து வீட்டில் மூதாட்டியை கொன்ற தாளவாடியை சேர்ந்த இருவர் கைது
தோட்டத்து வீட்டில் மூதாட்டியை கொன்ற தாளவாடியை சேர்ந்த இருவர் கைது
தோட்டத்து வீட்டில் மூதாட்டியை கொன்ற தாளவாடியை சேர்ந்த இருவர் கைது
ADDED : ஜூன் 11, 2025 01:39 AM
ப.வேலுார், தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொலை செய்த, தாளவாடி வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அடுத்த சித்தம்பூண்டி, குளத்துபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சாமியாத்தாள், 67.
கணவர் இறந்து விட்டதால் விவசாய தோட்டத்தில் தனியாக
வசித்து வந்தார். மகன், மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். சாமியாத்தாள், கடந்த, 7ல், உறவினர் வீட்டு திருமணத்திற்கு தங்க செயின், தங்க வளையல் அணிந்து சென்றார். அன்று இரவு, மர்ம நபர்களால் கத்தியால் குத்தி கொலை
செய்யப்பட்டு கிடந்தார்.
நல்லுார் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் டி.எஸ்.பி., சங்கீதா தலைமையில், 10 தனிப்படை அமைத்து, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இறந்துபோன சாமியாத்தாளின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், 'சிசிடிவி' கேமாரவில் பதிவான காட்சிகள், மொபைல் போன் அழைப்புகளை வைத்து ஆய்வு செய்ததில், குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து, கரூர் மாவட்டம், குளித்தலையில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளியான ஆனந்தராஜ், 29, இவரது நண்பர் அஜித்குமார், 23, ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஈரோடு மாவட்டம், தாளவாடியை சேர்ந்த ஆனந்தராஜ், இறந்த சாமியாத்தாள் தோட்டம், அவரது மகளின் ஆயில் மில்லில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், இரண்டரை ஆண்டுகள் வேலை செய்துள்ளார்.
அவரது வேலை மற்றும் நடவடிக்கையில் திருப்தி இல்லாததால், வேலையில் இருந்து நிறுத்திவிட்டனர். அதன் பின், அவ்வப்போது சாமியாத்தாளின் தோட்டத்திற்கு வேலைக்கு வந்து சென்றுள்ளார். கடைசியாக, கடந்த தீபாவளியின்போது, ஒரு வாரம் வந்து தங்கியுள்ளார். அப்போதும் அவர் நடவடிக்கை சரியில்லாததால், சாமியாத்தாளின் மகன் கிருஷ்ணமூர்த்தி, ஆனந்தராஜை திட்டி அனுப்பிவிட்டார். நன்றாக வேலை செய்தும் சரியான சம்பளம் இல்லாமல் அவமானப்பட்டதால், மூதாட்டியின் குடும்பத்தின் மேல் ஆனந்தராஜூக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் சாமியாத்தாளை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
இதையடுத்து, கடந்த, 7 இரவு, 12:00 மணிக்கு, நண்பர் தாளவாடி அஜித்குமாருடன், சாமியாத்தாள் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு கட்டிலில் படுத்து துாங்கிக்கொண்டிருந்த சாமியாத்தாளை, அரிவாளால் முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டியுள்ளனர். பின், அங்கிருந்து இருவரும் ஆனந்தராஜூக்கு சொந்தமான, 'ஜூபிடர்' டூவீலரில் தப்பி சென்றது தெரியவந்தது.
அவர்கள் இருவரையும்
பிடித்த போலீசார், தற்கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் கைப்பற்றினர்.