/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குறித்த நேரம் அலுவலகத்தில் இருக்க வி.ஏ.ஓ.,க்களுக்கு வலியுறுத்தல்
/
குறித்த நேரம் அலுவலகத்தில் இருக்க வி.ஏ.ஓ.,க்களுக்கு வலியுறுத்தல்
குறித்த நேரம் அலுவலகத்தில் இருக்க வி.ஏ.ஓ.,க்களுக்கு வலியுறுத்தல்
குறித்த நேரம் அலுவலகத்தில் இருக்க வி.ஏ.ஓ.,க்களுக்கு வலியுறுத்தல்
ADDED : ஜூன் 25, 2025 01:16 AM
ஈரோடு, ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வருவாய் கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம், ஆர்.டி.ஓ., ரவி தலைமையில் நடந்தது. ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் அமுதா முன்னிலை வகித்தார்.
கிசான் கார்டு மூலம் பயிர் கடன், கால்நடை கடன் பெறும் விவசாயிகள், தவணை தவறாமல் முழுக்கடனையும் செலுத்த வேண்டும். அதன் பிறகே அடுத்த கடன் பெற இயலும். சிபில் ஸ்கோர் பார்த்து, அதில் குறைபாடு இல்லாவிட்டால் மட்டுமே பயிர் கடன் பெற முடியும் என்ற விதியால் விவசாயிகள் பாதிக்கின்றனர். எனவே அந்நடை முறையை நீக்க வேண்டும்.
அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,க்கள் குறிப்பிட்ட நேரங்களில் கூட இருப்பதில்லை. கள ஆய்வு, தாலுகா அலுவலகம், பிற இடங்களுக்கு சென்றுவிட்டதாக கூறுவதால், பொதுமக்கள் மனுக்கள், சான்றுகளில் கையெழுத்து பெற சிரமம் உள்ளது. எனவே தினமும் காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை வி.ஏ.ஓ.,க்கள் அலுவலகத்தில் இருக்க வேண்டும்.
பட்டா, சிட்டா கேட்டு விவசாயிகள், பொதுமக்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கின்றனர். குறுஞ்செய்திகள் மூலம் இதற்கான நடவடிக்கை பற்றி தெரிவிக்கப்படுகிறது. இவை பல நேரங்களில் சரியாக வருவதில்லை. எனவே, கடிதம் மூலம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.
விவசாயிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 40 மனுக்களை பெற்று கொண்ட ஆர்.டி.ஓ., ரவி பேசியதாவது: காளிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர்
திறக்கப்பட்டு, விவசாய பணி நடந்து வருகிறது. ஆக்கிரமிப்பு, ஆகாயத்தாமரையால் கடைமடை வரை தண்ணீர் சீராக
செல்வதில் சிரமம் உள்ளதாக விவசாயிகள் கூறினர்.
அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வி.ஏ.ஓ.,க்கள் குறித்த நேரம்
அலுவலகத்தில் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு பேசினார்.