/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறை சாலைகளில் வாகன கணக்கெடுப்பு
/
பெருந்துறை சாலைகளில் வாகன கணக்கெடுப்பு
ADDED : மே 14, 2025 01:23 AM
பெருந்துறை, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நெடுஞ்சாலை துறை சார்பில், சாலைகளில் செல்லும் வாகனங்கள் கணக்கீடு செய்யப்படுகின்றன.
இதன்படி ஈரோடு கோட்ட பொறியாளர் ரமேஷ் கண்ணா உத்தரவின்படி, பெருந்துறை உதவி கோட்ட பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் கோவேந்தன்
மேற்பார்வையில், பெருந்துறை, வெள்ளோடு ரோடு, பெருந்துறை ஆர்.எஸ். ரோடு உள்ளிட்ட இடங்களில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மாநில சாலை, மாவட்ட சாலை மற்றும் குக்கிராமங்கள் வழியாக செல்லும் சாலைகளில், இரவு, பகலாக வாகனங்களை கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.இதில் சராசரியாக, 15 நிமிடங்களுக்குள் கனரக வாகனங்கள் மற்றும் கார், பைக் உட்பட, 250 வாகனங்கள் பயணிக்கின்றன. சில சமயங்களில் ஒரு நிமிடத்துக்குள், 25-க்கும் மேற்பட்ட வாகனங்களும் பயணிப்பதாக தெரிவித்தனர்.

