/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விஜயமங்கலம் பாரதி பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை
/
விஜயமங்கலம் பாரதி பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை
ADDED : மே 11, 2025 01:16 AM
பெருந்துறை, பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் ௨ தேர்வில், 100 சதவீத தேர்ச்சியுடன், தேர்வெழுதிய அனைத்து மாணவ, மாணவியரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். பள்ளியில் தேர்வெழுதிய, 472 மாணவ, மாணவியரும் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தனர்.
மாணவி சந்தியா, 600க்கு, 595 மதிப்பெண்கள் பெற்று, பெருந்துறை தாலுகா அளவில் முதலிடம் பிடித்தார். பாட வாரியாக இவரது மதிப்பெண் விபரம்: தமிழ்-9௯, ஆங்கிலம்-100, கணிதம்-100, இயற்பியல்-97, வேதியியல்-99, கணினி அறிவியல்-100.
ராகுல், பிரபா ஆகியோர், 592 மதிப்பெண் எடுத்து இரண்டாமிடம்; நவீனா, பவிஸ்கா, ஸ்ரீசாந்த், 591 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றனர். 590க்கு மேல் எட்டு பேரும், 580க்கு மேல் 27 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 102 பேரும் பெற்றனர். கணிதத்தில், 18 பேரும், கணினி அறிவியல் பயன்பாட்டில், 30 பேர் என, 78 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். சாதனை படைத்த மாணவ, மாணவியர், இதற்கு காரணமான ஆசிரியர்களை, பள்ளி தாளாளர் மோகனாம்பாள், தலைவர் செந்தில்குமார், துணை முதல்வர் சந்திரன் பாராட்டினர்.

