/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் குடிநீர் சப்ளை
/
அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் குடிநீர் சப்ளை
அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் குடிநீர் சப்ளை
அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் குடிநீர் சப்ளை
ADDED : ஜூன் 21, 2025 12:56 AM
அந்தியூர், அந்தியூர் பேரூராட்சி முதலாவது வார்டுக்கு உட்பட்ட வேடர் காலனிக்கு, 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம் மக்கள் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. கேன் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் கொதிப்படைந்த, 30க்கும் மேற்பட்ட மக்கள், வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் சரஸ்வதி தலைமையில், பேரூராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் நேற்று காலை முற்றுகையிட்டனர். அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேரூராட்சி தலைவர் பாண்டிம்மாள், மொபைல் போனில் தொடர்பு கொண்டு, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசினார். இதனால் மக்கள் கலைந்து சென்றனர். சிறிது நேரத்தில் அப்பகுதிக்கு குடிநீர் வினியோகமும் நடந்தது.