/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதல்வர் திட்ட முகாம் கலெக்டர் துவக்கி வைப்பு
/
முதல்வர் திட்ட முகாம் கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 16, 2024 11:22 PM

உளுந்துார்பேட்டை, ஜூலை 17-
பிள்ளையார்குப்பத்தில் மக்களிடம் முதல்வர் திட்ட முகாமினை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்து மனுக்களைப் பெற்றார்.
உளுந்துார்பேட்டை அடுத்த பிள்ளையார்குப்பம் பகுதியில் ஊரக பகுதிகளில் மக்களிடம் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். உளுந்துார்பேட்டை எம்.எல்.ஏ., மணிக்கண்ணன் முன்னிலை வகித்தார்.
பின், உளுந்துார்பேட்டை புறவழிச் சாலை அமைப்பதற்கு நில அளவீடு செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டார். உளுந்துார்பேட்டை பஸ் நிலையம் அமைய உள்ள இடங்களை ஆய்வு செய்தார்.
அப்போது உளுந்துார்பேட்டை நகராட்சி கமிஷனர் இளவரசன், தாசில்தார் ஆனந்த கிருஷ்ணன், உதவி கோட்ட பொறியாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.