/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
/
ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
ADDED : ஜூன் 08, 2024 04:44 AM
கள்ளக்குறிச்சி : அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங் களில் சேர்க்கைக்கான விண்ணப்பம் செய்ய வரும் 13ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திகுறிப்பு:
தமிழகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன.
தற்போது 2024-25ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடந்து வருகிறது.
இதற்கு 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது.
விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி ஜூன் 7ம் தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தற்போது வரும் 13 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்துார்பேட்டை, சங்கராபுரம் மற்றும் சின்ன சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உதவி மையங்கள் மூலமாக சேர்க்கை பதிவை மேற்கொள்ளலாம்.
மேலும் தொழிற் பயிற்சி நிலைய சேர்க்கைக்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் சந்தேகம் ஏற்பட்டால் govtvpmdtad@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் 99446 18626 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.