/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முலாம்பழம் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்
/
முலாம்பழம் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஜூலை 14, 2024 11:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த எலவடி கிராமத்தில் முலாம்பழம் பயிரிடுவதில் அப்பகுதி விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
முலாம்பழம் பயிரிடுவதால் கூடுதல் லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து எலவாடி கிராமத்தில் 6 ஏக்கர் அளவில் முலாம்பழம் பயிரிட்டுள்ள விவசாயி பெரியசாமி கூறுகையில், '60 நாட்கள் பயிரான முலாம்பழம் பயிரிட அதிகளவில் தண்ணீர் தேவையில்லை. சிக்கனமாகவே பயன்படுத்தலாம். சொட்டுநீர் பாசனம் மூலம் பயிரிட்டுள்ளேன்.
ஒரு ஏக்கருக்கு 12 டன் பழம் கிடைக்கும். இந்த பயிருக்கு அதிகளவு ஆட்கள் தேவையில்லை. குறைந்த செலவில் நிறைந்த லாபம் பெறலாம்' என்றார்.