/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சு.பில்ராம்பட்டில் கஞ்சா: வாலிபருக்கு போலீஸ் வலை
/
சு.பில்ராம்பட்டில் கஞ்சா: வாலிபருக்கு போலீஸ் வலை
ADDED : ஜூலை 18, 2024 04:36 AM
திருக்கோவிலூர், : அரகண்டநல்லூர் அடுத்த சு.பில்ராம்பட்டில் 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அரகண்டநல்லூர் அடுத்த சு.பில்ராம்பட்டு கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில், அரகண்டநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மதியம் 2:30 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பில்ராம்பட்டு, நூலகம் அருகே போலீசாரை பார்த்துவிட்டு பைக்கை விட்டுவிட்டு வாலிபர் ஒருவர் அங்கிருந்து தப்பி சென்றார்.
சந்தேகமடைந்த போலீசார் பைக்கை சோதனையிட்ட போது, அதில் 250 கிராம் எடையுள்ள கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் சு.பில்ராம்பட்டு, வேடாலத்தை சேர்ந்த சேகர் மகன் சச்சின், 21; என தெரியவந்தது.
இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து பைக்கை பறிமுதல் செய்து, தலைமறைவான சச்சினை தேடி வருகின்றனர்.