ADDED : ஜூலை 16, 2024 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: பகண்டைகூட்ரோட்டில் விற்பனைக்காக குட்கா பாக்கெட்டுகள் வைத்திருந்த கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பகண்டை கூட்ரோட்டில் பெட்டிக்கடை வைத்துள்ள அரியலுாரைச் சேர்ந்த பிரகாஷ், 38; குட்கா விற்றது தெரிய வந்தது.
உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, 855 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.