/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பொது மக்கள் குற்றச்சாட்டு: ஷ்ரவன்குமார் மறுப்பு
/
பொது மக்கள் குற்றச்சாட்டு: ஷ்ரவன்குமார் மறுப்பு
ADDED : ஜூன் 20, 2024 03:52 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் சாராயம் அருந்தியதாக பலர் இறந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டிய நிலையில், கலெக்டராக இருந்த ஷ்ரவன்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கலெக்டர் ஷ்ரவன்குமார், எஸ்.பி., சமய்சிங்மீனா, எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், செந்தில்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டு உடல் நலம் குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து கலெக்டர் ஷ்ரவன்குமார், கூறியதாவது:
கருணாபுரம் பகுதியை சேர்ந்த நபர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த 3 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரியில் அனுமதிக்கப்படவில்லை. இறந்த பிரவீன் வயிற்றுவலி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் வந்துள்ளார். ஒருவர் வயது மூப்பு காரணமாகவும், ஒருவர் நொடிப்பு ஏற்பட்டும் இறந்ததாக கூறப்படுகிறது.
தற்போது சிகிச்சையில் இருப்பவர்களில், வயிற்றுபோக்கு ஏற்பட்டதற்கான அறிகுறி உள்ளவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிகிச்சையில் இருப்பவர்களின் ரத்த மாதிரி ஆய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் உயிரிழந்ததற்கான காரணம் தெரியும். பலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதால் கருணாபுரம் பகுதியில் குடிநீர் பரிசோதனை செய்யவும், மருத்துவ முகாம் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.