/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத்திறனாளிகளை ஒப்படைக்கும் போராட்டம்
/
மாற்றுத்திறனாளிகளை ஒப்படைக்கும் போராட்டம்
ADDED : ஜூலை 16, 2024 11:58 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மாற்றுத்திறனாளிகளை கலெக்டரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், நடந்த போராட்டத்திற்கு, சங்க மாவட்ட தலைவர் வேலு தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
உதவித்தொகைக்கு விண்ணப்பித்து ஓராண்டிற்கு மேல் காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு, வருவாய்த்துறை மூலம் 1,500 ரூபாய், கடும் ஊனத்திற்கான உதவித்தொகை நலத்துறை மூலம் 2 ஆயிரம் வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பத்தினரை வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவராக கணக்கிட்டு, ஏ.ஏ.ஒய்., கார்டு மூலம் 35 கிலோ அரிசி வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 100 நாட்கள் தொடர்ச்சியாகவும், 4 மணி நேர வேலை மற்றும் முழு ஊதியம் தடையில்லாமல் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினர்.